×

பெரம்பலூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 378 மனுக்கள் குவிந்தது

 

பெரம்பலூர்,டிச.9: பெரம்பலூரில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 378 மனுக்கள் பெறப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக க்கூட்ட அரங்கில் நேற்று (8ம்தேதி) திங்கட்கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்து கலெக்டர் அலுவலக வராண்டாவில் காத்திருந்த மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்டக் கலெக்டர் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொ ண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Public Grievance Redressal Day ,Perambalur ,District ,Collector ,Mrinalini ,Perambalur District Collectorate Hall ,
× RELATED சிஐடியு சார்பில் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை மனு