×

வ.உ.சி. பூங்காவிற்குள் செல்ல தடை காணும் பொங்கல் கொண்டாட வந்த பெண்கள் ஏமாற்றம்

ஈரோடு, ஜன. 17:ஈரோடு வ.உ.சி. பூங்கா மூப்பட்டதால் காணும் பொங்கல் கொண்டாட வந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் கடைசி நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உறவினர்கள், நண்பர்களை பொது இடத்தில் சந்தித்து உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இதில், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலன்று பெண்கள் மட்டும் ஒரு நாள் சுதந்திரமாக கொண்டாடி மகிழ அனுமதிக்கப்படும். ஆண்களுக்கு அனுமதி இல்லாததால், பெண்கள் காணும் பொங்கலன்று ஆண்டுதோறும் வ.உ.சி. பூங்காவில் ஆடி, பாடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக காணும் பொங்கல் பண்டிகையான நேற்று பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று பொது இடங்களில் காணும் பொங்கல் கொண்டாட்டம் ஏதுவும் நடைபெற வில்லை. வ.உ.சி. பூங்காவிலும் நேற்று பொதுமக்கள உள்ளே செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இதை அறியாமல் வ.உ.சி.பூங்காவுக்கு காணும் பொங்கல் கொண்டாட வந்த பெண்களை பாதுகாப்பு போலீசார் திருப்பி அனுப்பியதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்

Tags : women ,Pongal ,park ,
× RELATED ஆவணம் இல்லாததால் பறிமுதல்...