- தேவேந்திரகுல வெள்ளலார்
- மீனாட்சி அம்மன்
- அறநிலையத்துறை
- மதுரை
- மானகிரி செல்வகுமார்
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை: மதுரையை சேர்ந்த மானகிரி செல்வகுமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சி அம்மன்கோயிலின் அறங்காவலர் குழுவில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அறங்காவலராக நியமிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக, இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட அறங்காவலராக நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பாக நான் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக நான் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் முந்தைய உத்தரவில், என்னுடைய கோரிக்கையை பரிசீலித்து உத்தரவுகளைப் பிறப்பிக்க உத்தரவிட்டது.
இதுவரை எனது கோரிக்கை பரிசீலனை செய்யப்படவில்லை, இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ஏற்கனவே நீதிமன்றம் அறங்காவலர்கள் நியமனம் குறித்து விதிகளை உருவாக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரின் மனு இதுவரை பரிசீலனை செய்யப்படவில்லை. எனவே மனுதாரர் அறநிலையத்துறை அதிகாரிகளை அணுகி மீண்டும் மனு கொடுக்க வேண்டும். அதை பரிசீலனை செய்து அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
