×

நீதிமன்றத்தில் பொங்கல் விழா

திருவாடானை, ஜன.13: திருவாடானை நீதிமன்றத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருவாடானை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பொங்கல் விழா நீதிபதி பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி தங்கராஜ் கலந்து கொண்டார். முன்னதாக  பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் அலுவலர்கள் பொங்கல் வைத்து  படையலிட்டு  வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவர் தனபால், செயலாளர் ராம்குமார், வழக்கறிஞர்கள் ஜெகன், கணேசபிரபு, சதீஷ் மற்றும் அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : ceremony ,court ,
× RELATED காசநோய் தடுப்பு விழா