×

சபரிமலை சீசன் காரணமாக கோவையில் நேந்திரன் பழம் கிலோவுக்கு ரூ.15 உயர்வு

 

கோவை, டிச. 7: கோவையில் நேந்திரன் பழம் மற்றும் சில வகை வாழைப்பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் கிலோ ரூ.35க்கு விற்கப்பட்ட கதலி வாழைப்பழம், தற்போது ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, அக்டோபரில் ரூ.12 முதல் ரூ.13க்கு விற்கப்பட்ட நேந்திரன் வாழை தற்போது ரூ.28 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து வாழைப்பழ மொத்த விற்பனையாளர்கள் கூறியதாவது:டிசம்பர் மாதம் விலை உயர்வு என்பது சாதாரணம். அய்யப்பன் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் காலத்தில் கேரளாவில் நேந்திரன் வாழைக்கு அதிக தேவை இருக்கும். கடந்த ஆண்டு சந்தையில் குறைந்த வரவு காரணமாக நேந்திரன் பழம் ரூ.60 வரை விற்கப்பட்டது.

அதை ஒப்பிடும்போது தற்போது விலை குறைவு தான். அதேபோல மைசூரில் இருந்து அதிகளவு நேந்திரன் வரவு இருப்பதால் விலை அதிகமாக உயராமல் உள்ளது. இல்லையெனில், கிலோவிற்கு ரூ.50 வரை உயர்ந்து இருக்கும். கடந்த வாரம் கிலோ ரூ.12 முதல் ரூ.13க்கு விற்கப்பட்ட நேந்திரன் வகை வாழை பழம் தற்போது ரூ.28 வரை உயர்ந்துள்ளது.

Tags : Sabarimala ,Coimbatore ,
× RELATED கிராம பகுதிகளில் வேலை வாய்ப்பு திட்டம்