×

டிச.16ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

 

விருதுநகர், டிச.5: டிச.16ம் தேதி வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டங்களில் டிச.16 காலை 11 மணியளவில் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி சார் ஆட்சியர் மற்றும் சாத்தூர், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான மனுக்களை கோட்டாட்சியர்களிடம் நேரில் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags : Farmers' Grievance Redressal Day ,Virudhunagar ,Collector ,Sugaputra ,Sivakasi ,Aruppukottai ,Sathur ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்