×

சூலக்கரையில் நாளை மின்தடை

 

விருதுநகர், டிச.5: விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் வெளியிட்ட தகவல்: சூலக்கரை துணை மின்நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சூலக்கரை கிராமம், கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட ஆயுதப்படை, காவலர் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே.செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மார்டன் நகர், மாத்திநாயக்கன்பட்டி, குல்லூர்சந்தை, தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். விருதுநகர் துணைமின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அல்லம்பட்டி, காமராஜர் ரோடு, முத்துராமன்பட்டி, ஆத்துமேடு, மாத்துநாயக்கன்பட்டி ரோடு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : Soolakkarai ,Virudhunagar ,Virudhunagar Electricity Board ,Executive Engineer ,Muralitharan ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...