×

திடக்கழிவு மேலாண்மைக்கு 200 வாகனங்கள் அரசுக்கு மாநகராட்சி கோரிக்கை

 

கோவை, டிச. 5: கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைக்கு 200 வாகனங்களை கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கோவை மாநகரில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில், தள்ளுவண்டிகளை மாற்றி கூடுதல் வாகனங்களை கொண்டு குப்பை சேகரிப்பு பணியை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, அரசிடம் கூடுதல் வாகனங்கள் கேட்டு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கழிவுகளை கையாள 200 இலகுரக வாகனங்கள் கேட்டு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கூடுதல் வாகனங்கள் கொண்டு குப்பை சேகரிக்கப்படும். தற்போது நிரந்தர, ஒப்பந்தம் என 5,000 பணியாளர்கள் உள்ளனர். கூடுதலாக 3,000 பணியாளர்கள் தேவைப்படுகிறது. பல நிரந்தர பணியாளர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.

Tags : Coimbatore ,Coimbatore Corporation ,
× RELATED அரசின் ஆன்மிக சுற்றுப்பயணம் கோவையில் இருந்து 30 பேர் காசி சென்றனர்