- டி. கே. சிவகுமார்
- தில்லி
- சித்தராமையா
- பெங்களூரு
- முதல் அமைச்சர்
- காங்கிரஸ்
- தேசிய பொதுச் செயலாளர்
- கேசி வேணுகோபால்
- நாராயணகுரு-மகாத்மா
- காந்தி
- Mangaluru
- டெல்லி…
பெங்களூரு: மங்களூருவில் நடந்த சமூக சீர்திருத்தவாதி நாராயணகுரு – மகாத்மா காந்தி சந்திப்பின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் ஒன்றாக கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையாவிடம், டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, அவர் தாராளமாக டெல்லி செல்லட்டும். யாராவது அவரைத் தடுத்தார்களா?.
என்னை அதிகாரப்பூர்வமாக அழைத்தால் தான் நான் டெல்லிக்கு செல்வேன். என்னை அழைக்கவில்லை என்றால் நான் செல்லமாட்டேன். கட்சி மேலிடம் டெல்லியில் ஆலோசனைக்கு அழைப்பதாக இருந்தால், வேணுகோபால் மூலமாகத்தான் தெரியப்படுத்துவார்கள்’ என்று கூறினார்.
மங்களூருவில் கே.சி.வேணுகோபாலுடனான முதல்வர் சித்தராமையாவின் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், வேணுகோபாலையோ, ராகுல் காந்தியையோ அல்லது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைேயா முதல்வர் சித்தராமையா சந்தித்து பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டார்.
