கரூர், டிச. 3: அரசு காலனி பகுதியில் சேதமடைந்து உள்ள பகுதி நேர நூலக கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் அரசு காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியினர் நலன் கருதி இந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பகுதி நேர நூலகம் சில ஆண்டுகள் செயல்பட்டன.
தற்போது போதிய பராமரிப்பு குறைவு காரணமாக அந்த நூலக கட்டிட வளாகம் உட்பட அனைத்து கட்டிடங்களும் சிதிலடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.எனவே இதனை புதுப்பித்துத் தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோ ரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
