கொடுமுடி, டிச.1: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ளது வெங்கம்பூர். இங்குள்ள வடக்குபுதுப்பாளையம் தண்ணீர்பந்தலைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சம்பத் (30). இவரது நண்பர் பூவேந்திரன் (41). இவர்கள் 2 பேரும் நேற்று பைக்கில் காசிபாளையம் காவிரி ஆற்றுப் படித்துறைக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது மதுபோதையில் ஆற்றில் இறங்கிய சம்பத் நீரில் மூழ்கினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் சம்பத்தை சடலமாக மீட்டனர். கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
