- சமூக நீதி மாநாட்டை வெல்லுங்கள்
- ஈரோடு
- வெற்றி
- சமூக நீதி 6வது மாநில மாநாடு
- புதிய திராவிடக் கழகம்
- எக்மாத்தூர்
- ராஜ்கவுண்டர்
- வெட்டுவகவுண்டர்
- பூலுவார்
- பூலுவகவுண்டர்
- Punnam
- வெட்டுவகவுண்டர்…
ஈரோடு, டிச.1: புதிய திராவிட கழகம் சார்பில் வெல்லட்டும் சமூக நீதி 6வது மாநில மாநாடு, எழுமாத்தூரில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு, அக்கழகத்தின் நிறுவன தலைவர் ராஜ்கவுண்டர் தலைமை வகித்தார். இதில்,வேட்டுவக்கவுண்டரின் உட்பிரிவுகளான வேட்டைக்காரர்,வேட்டைக்கார்கவுண் பூலுவர், பூலுவக்கவுண்டர், புன்னம் வேட்டுவக்கவுண்டர், வேட்டைக்கார நாயக்கர்,வேட்டுவர். வில்வேடுவர். மலைவாழ் வேட்டுவர், வால்மீகி, வலையர் ஆகிய பெயர்கள் தமிழகத்தில் ஆகிய பிரிவுகளில் உள்ள அனைத்தையும் எம்பிசி வேட்டுவக்கவுண்டர் என்ற பெயரில் அறிவிக்க வேண்டும். திமுக தலைமையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய திராவிட கழகத்திற்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 3 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான கொல்லிமலை ஆண்ட மாமன்னர் வல்வில் ஓரிக்கு ரூ.3 கோடி மதிப்பில் நாமக்கல்லில் மணி மண்டபம் அமைக்க வேண்டும். கொடிவேரி அணை கட்டிய செயங்கொண்ட கொங்காள்வானுக்கு கொடிவேரியில் வெண்கலச் சிலையுட கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும்.குணாளன் நாடாருக்கு காங்கேயத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாமன்னர் வள்ளல் வல்வில் ஓரி மாளிகை என்று பெயர் சூட்ட வேண்டும். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் கல்வி, பொருளாதாரம்,வேலைவாய்ப்பு, அரசியலில் பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த வெல்லட்டும் சமூகநீதி மாநாட்டில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,பிரகாஷ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம்,தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
