- திமுக
- உதயநிதி
- சிவகாசி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- விருதுநகர் மாவட்டம்
- சிவகாசி கழகம்
- மாநகர திமுக 5வது பகுதி 44வது வட்ட கழகம்...
சிவகாசி, நவ. 29: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் கடந்த 2 நாட்களாக திமுக சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகாசி மாநகராட்சியில் மாநகர திமுக 5வது பகுதி 44வது வட்ட கழகத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் துவக்கி வைத்தார்.
இம்முகாமில் இதயம், நுரையீரல், காது, மூக்கு, தொண்டை, கண், செவித்திறன் பரிசோதனை மற்றும் பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மேயர் சங்கீதா இன்பம், பகுதி கழக செயலாளர் காளிராசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வின் ஏசுதாஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்ட கழக செயலாளர் சுரேஷ் செய்திருந்தார்.
