×

மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

ஈரோடு, நவ. 29: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில், பெருந்துறை சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சரும், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளருமான தோப்பு வெங்கடாச்சலம் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் சோலி பிரகாஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தீபக் டெண்டுல்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Tags : Alternative ,DMK ,Erode ,Central District DMK ,Perundurai, Erode district ,Alternative Party ,Perundurai Assembly Constituency West Union ,Former ,DMK Central District ,
× RELATED தாளவாடி தொழிலதிபர் கடத்தல்? போலீசார் விசாரணை