×

தவெகவை இழுக்க அசைன்மென்ட்; பாஜகவின் ஸ்லீப்பர் செல் செங்கோட்டையன்: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று அளித்த பேட்டி: திமுகவும், அதிமுகவும் இணைந்து தான் செயல்படுகிறார்கள் என்று கூறும் செங்கோட்டையனுக்கு நேற்று வரை புத்தி எங்கே போனது. யாரை வைத்து யாரும் எந்த அரசியல் செய்தாலும், மக்களுக்கு செய்யும் களப்பணி தான் மக்கள் மனதில் நிற்கும். தமிழ்நாடு முதல்வர் கடந்த நான்கரை ஆண்டுகளாக செய்கின்ற களப்பணிகள் திமுக கூட்டணி வெற்றிக்கு துணை நிற்கும். தற்போதும் புனிதமான ஆட்சி தான் நடக்கிறது. எதிர்காலத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறும். கர்ச்சீப் போர்த்தி செல்லும் பழக்கம் எங்களுக்கு கிடையாது.

அதற்கு தகுதியுடைய இந்தியாவிலேயே ஒரே அரசியல் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை நிரூபித்திருக்கிறார். கார் மாறி காட்சியளிப்பவர், ஏசி காரிலேயே வியர்வை வந்து கர்சீப்பால் துடைத்தேன் என்று சொல்பவர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு முதல்வரை போல் தைரியமிக்க, வீரமிக்க முதல்வர் இந்தியாவிலேயே கிடையாது. செங்கோட்டையனை பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன். தவெகவை பாஜகவுக்கு இழுத்து வரும அசைன்மென்ட்டுக்கு தான் அனுப்பப்பட்டிருக்கிறார் என்பது எங்களுடைய கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : BJP ,Sengkottiyan ,Minister ,Ragupati ,Pudukkottai ,Sengkottai ,Dimuka ,Attamuga ,
× RELATED மக்கள் மேலயும், உன் மேலயும்...