- கில்லியூர்
- பேரூர் திமுக
- உதயநிதி
- Karungal
- உதயநிதி ஸ்டாலின்
- திமுக
- பேரூர்
- பஞ்சாயத்து
- துணை ஜனாதிபதி
- சத்யராஜ்
கருங்கல்,நவ.28: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கிள்ளியூர் பேரூர் திமுக சார்பில், பேரூராட்சி பகுதிகளில் பொது மக்களுக்கு பேரூர் திமுக செயலாளரும், பேரூராட்சி துணை தலைவருமான சத்திய ராஜ் தலைமையில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் தொலையாவட்டம் பகுதியில் உள்ள ஜீவ ஜோதி முதியோர் இல்லத்தில் தங்கி உள்ள 50க்கு மேற்பட்ட முதியவர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்சியில் கிள்ளியூர் பேரூராட்சி தலைவி ஷீலா சத்தியராஜ், திமுக குமரி மேற்கு மாவட்ட பொருளாளர் ததேயு பிரேம் குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் ஜூட் தேவ், கிள்ளியூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள், ராபின்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
