* இசையமைப்பாளருடன் மந்தனா காதல் திருமணம்
மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் வரும் 23ம் தேதி (நாளை) திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக, மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடந்த மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் மந்தனாவின் கண்ணை கட்டி கூட்டி வந்த பலாஷ் முச்சல், மைதானத்தின் நடுவே மந்தனாவின் கட்டை அவிழ்த்து தன் காதலை முன்மொழிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் இருவரும் கடந்த 2019ம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மந்தனாவின் திருமணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.
* ரொனால்டோ இல்லாத போஸ்டரால் சர்ச்சை
நியூயார்க்: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் 2026ம் ஆண்டு, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொள்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், உலகக் கோப்பையில் ஆடும் வீரர்கள் இடம்பெற்ற, அதிகாரப்பூர்வ போஸ்டர் ஒன்றை, ஃபிபா வெளியிட்டது. அதில், போர்ச்சுகலை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ படம் இடம்பெறவில்லை. அதற்கு, உலகம் முழுவதும் ஏராளமான கால்பந்தாட்ட ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, அந்த போஸ்டரை ஃபிபா நேற்று நீக்கியுள்ளது.
* பிரேசில் முன்னணி வீரர் பெர்னான்டினோ ஓய்வு
பிரேசிலியா: பிரேசில் கால்பந்தாட்ட அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான பெர்னான்டினோ (40) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2003ல், யு20 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியில் பெர்னான்டினோ இடம்பெற்றிருந்தார். கடந்த 2019ல், கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை வென்ற அணியிலும் முக்கிய பங்காற்றினார். சிறந்த தடுப்பாட்ட வீரரான பெர்னான்டினோ கூறுகையில், ‘கால்பந்தாட்டத்தில் தேவையான அனைத்து சாதனைகளையும் அரங்கேற்றி விட்டேன். அந்த திருப்தியுடன் கால்பந்தாட்ட போட்டிகளில் ஓய்வு பெறுகிறேன்’ என்றார்.
