×

ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் செமிபைனலில் இந்தியா தோல்வி

தோஹா: ஆசியா கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் டி20 கிரிக்கெட் முதல் அரை இறுதிப் போட்டியில் நேற்று, இந்தியா ஏ – வங்கதேசம் ஏ அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்கதேசம், 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா ஏ அணியும் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்ததால், போட்டி டை ஆகி, சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் ஆடிய இந்திய அணியின் ஜிதேஷ் சர்மா, அசுதோஷ் சர்மா முதல் இரு பந்துகளி்ல் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அடுத்து ஆடிய வங்கதேசம், ஒரு ரன் எடுத்து வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.

Tags : India ,Rising Stars Cricket ,Doha ,India A ,Bangladesh ,Asia Cup Rising Stars T20 Cricket ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி