×

வீட்டில் மான் இறைச்சி சமைத்த வாலிபர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல் ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் வேட்டையாடி

ஒடுகத்தூர், நவ.22: ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் மானை வேட்டையாடி வீட்டில் சமைத்த வாலிபரை வனத்துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பாக்கம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வனப்பகுதியில் நுழைந்து மானை வேட்டையாடி அதனை வீட்டில் சமைத்து கொண்டிருப்பதாக மாவட்ட வன அலுவலர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, உதவி வனப்பாதுகாவலர் மணிவண்ணன் அறிவுறுத்தலின் பேரில் ஒடுகத்தூர் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனத்துறையினர் பாக்கம்பாளையம் கிராமத்தில் நேற்று வீடு வீடாக சென்று ‌தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்(29), என்பவரது வீட்டில் சோதனை நடத்தியபோது வீட்டில் மான் இறைச்சி சமைத்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வீடு முழுவதும் ஆய்வு செய்தபோது வீட்டில் இறந்த மானின் தலை, கால்கள் மற்றும் உரிமம் இல்லாத ஒரு நாட்டு துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த வனத்துறையினர் ஆனந்தை பிடித்து அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்கு பதிவு‌ செய்து ஆனந்தை கைது செய்து வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வனப்பகுதியில் மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Odugathur ,Pakkampalayam ,Vellore district ,
× RELATED பைப் மூலம் இயற்கை எரிவாயு சப்ளை வழங்க...