×

“அன்னம் தரும் அமுதக்கரங்கள்” 275வது நாள்: பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி சிறப்பித்தார் அமைச்சர் கே.என். நேரு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவாக சென்னை கிழக்கு மாவட்டம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கழகத் தலைவரின் 72வது பிறந்த நாளையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் ஏற்பாட்டில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” மாபெரும் உன்னதமான திட்டமானது 2025 பிப்ரவரி 20ஆம் தேதி முதல், 2026 பிப்ரவரி 19ஆம் தேதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 நபர்களுக்கு மேல், வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இச்சிறப்புமிகு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 20.2.2025 அன்று கொளத்தூரில் துர்கா ஸ்டாலினுடைய கரங்களால் தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள். அந்த வகையில் 24ஆம் நாள் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி , 30வது நாள் உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கோவி. செழியன் , 50வது நாள் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி , 75வது நாள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் , 100வது நாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , 125வது நாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் , 150வது நாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் , 175வது நாள் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , 200வது நாள் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் , 225வது நாள் சட்டம் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , 250வது நாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் , கலந்து கொண்டு காலை உணவு வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியானது வெற்றிகரமாக தொடர்ந்து 275வது நாளான இன்று (21.11.2025), கொளத்தூர், பெரியார் நகர், 68-வது வார்டு, பாலசுப்பிரமணியன் சாலை மற்றும் 67அ-வது வார்டு, செம்பியம், பல்லவன் சாலை ஆகிய 2 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக “நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு” கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி சிறப்பித்தார்.

இச்சிறப்புமிக்க “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” திட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தினந்தோறும் 250 நாட்களுக்கும் மேல் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 7.00 மணியளவில் கலந்து கொண்டு பசியாக வரும் பொது மக்களுக்கு, பசியாற காலை உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இச்சிறப்புமிக்க திட்டமானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, அப்பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காலை உணவு அருந்திவிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரை வாழ்த்தி வருகிறார்கள்.

“அன்னம் தரும் அமுதக்கரங்கள்” மாபெரும் திட்டமானது இன்றுடன் (21.11.2025) தற்பொழுது 275நாள் கடந்து, 2026 பிப்ரவரி 19ஆம் தேதி வரை தொடர்ச்சியாக துறைமுகம், வி.க நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகள் என கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. திராவிட மாடலின் செயல்களில் ஒன்றாக இத்திட்டம் நடத்துவதில் சென்னை கிழக்கு மாவட்டம் பெருமை கொள்கிறது.

இந்நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, பகுதி செயலாளர்கள் ஐசிஎப்.வ.முரளிதரன், பி.நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.சந்துரு, மகேஷ்குமார், மண்டலக் குழுத்தலைவர்கள் சரிதா மகேஷ்குமார், கூ.பீ.ஜெயன், நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) டாக்டர் சாந்தகுமாரி, மாமன்ற உறுப்பினர்கள் தாவுத்பீ, அமுதா பொன்னிவளவன், யோகபிரியா, சுதா தீனதயாளன், ராஜேஷ்வரி ஸ்ரீதர், நாகவள்ளி பிரபாகரன், டிஎஸ்பி.ராஜகோபால் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Annam-Giving Primates ,Minister ,K. N. Nehru ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,K. ,Eastern District of Chennai ,Humanist Festival of the First People ,Stalin ,Minister of Hindu Religious Affairs, P. K. ,
× RELATED அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்;...