×

மன்னார்குடி – திருச்செந்தூர் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவை: டிஆர்பி ராஜா தொடங்கி வைத்தார்

 

 

திருவாரூர்: மன்னார்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நடந்த விழாவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொண்டு மன்னார்குடி – திருச்செந்தூர் வழித்தடத்தில் (பட்டுக்கோட்டை ஈசிஆர் வழியாக) புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஜனநாயகத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்காக முதலில் குரல் கொடுப்பதோடு, உடனடியாக களத்திற்கு வந்து பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை சொல்வதில் தமிழக முதல்வர் எப்போதும் முன் வரிசையில் இருந்து வருகிறார்.

தொகுதி மறுசீரமைப்பால் பாராளுமன்றத்தில் தமிழர்களின் குரல் குறைவாக ஒலிக்க போகிறது என்று முத லில் எச்சரிக்கை மணி அடித்ததும், தற்போது எஸ்.ஐ.ஆர் குறித்தும் இந்திய அளவில் அவர் தான் முதன் முதலில் குரல் கொடுத்தார். தேர்தல் ஆணையத்தின் தவறான நடவடிக்கைகளால் பீகார் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது உண்மையே. எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என நாங்கள் கூற வில்லை. அதை சரியாக செய்ய வேண்டும் என்று தான் சொல்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் பல கோடி மக்கள் வசித்து வரும் நிலையில், எந்த ஒரு முன்னேற் பாடும் இல்லா மல், போதிய அவகாசம் கொடுக்காமல், அவசரகதியில் எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு நடத்தப் படுவது எப்படி சரியாக இருக்கும் என்ற கேள்வி எழுவது நியாயமானதே ஆகும்.

திமுக தொண்டர்கள் களத்தில் விழிப்பாக இருப்பதால் எஸ்.ஐ.ஆர் விசயத்திலும் தமிழ்நாடு காப்பற்றப் படும். அதே வேளையில், அதிமுக நண்பர்களின் வாக்குரிமையை காப்பாற்ற போவதும் திராவிட நாயகன் மு.க.ஸ்டா லின் தான் என்பதை அவர்களும் உணர வேண்டும் என்றார்.

Tags : TRP Raja ,Mannarkudi-Tiruchendur route ,Thiruvarur ,Minister ,Industry ,Investment Promotion and Trade ,TRP ,Raja ,Tamil Nadu Government Transport Corporation ,Mannarkudi ,
× RELATED சென்னையில் இருந்து புறப்படும் 50...