×

தனியார் அமைப்புகள் சார்பில் அரசு பள்ளிகளுக்கு மேஜைகள், இருக்கைகள்

மதுராந்தகம், நவ.15: செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சீனிவாசர் அறக்கட்டளை, மற்றும் சென்னை ரோட்டரி மிட்டவுன், எஸ்.பி.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளை இணைந்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக ‘கற்றல் வசதியில் கல்வி’ எனும் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுதாமூர் மற்றும் அனந்தமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 660 மேஜை, இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அச்சரப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ஓரத்தி கண்ணன் தலைமை தாங்கினார். இதில் தனியார் நிறுவன நிர்வாகிகள் விஜய கிருஷ்ணன், ஜி.எட்வின், கமல், கவிஞர் ஸ்ரீ தேவி துரைஅரசு, தலைமை ஆசிரியர்கள் மாரியப்பன், பாக்கியலட்சுமி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பாலசுப்ரமணியன், செல்லப்பன், முத்துவிஜி, பாபு, பொன்னப்பன், நல்லாசிரியர் சவுமியாநாராயணன், ஏழுமலை, சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

Tags : Madurantagam ,Sri Sinivasar Foundation ,Chengalpattu district ,Chennai Rotary Midtown ,S. B. Oh. A. ,Education Foundation ,
× RELATED காஞ்சிபுரத்தில் 770 படுக்கை வசதிகளுடன்...