×

கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை தரக்கோரி செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் போராட்டம்

கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே பள்ளி நீரோடை கிராமத்தைச் சேர்ந்த சிகாமணி என்பவரது மகன் ஆசை என்கின்ற பார்த்திபன் (22) கடந்த ஏப்ரல் மாதம் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை தரக்கோரி குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள 200 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் உச்சியில் ஏரி தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இது குறித்து போலீசார் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags : Cuddalore ,Parthipan ,Chikamani ,Kullanchawadi ,Cuddalore district ,
× RELATED பல்கலை. பெயரில் போலிச் சான்றிதழ்கள்...