×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகள் கேட்பு

காஞ்சிபுரம், நவ.5: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் கேட்டறிந்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 393 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துதுறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Kanchipuram ,District Revenue Officer ,Murugesan ,People’s ,Reconciliation ,Center ,District Collectorate Complex… ,
× RELATED காஞ்சிபுரத்தில் 770 படுக்கை வசதிகளுடன்...