×

ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை: ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றம், அரசு தலைமை வழக்கறிஞர் ராமன் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இயக்குநர் மணிரத்னம் வீட்டிற்கும், தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கும், சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. திரிஷா, மணிரத்னம் வீடுகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை; தேனாம்பேட்டை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : CBI court ,Chennai ,Chief Public Prosecutor ,Raman ,Mani Ratnam ,Eldham Road ,Teynampet, Chennai ,Trisha ,Senadop Road ,Teynampet, Chennai… ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...