×

கோபியில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை

ஈரோடு: கோபியில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுடன் சந்தித்ததன் எதிரொலியாக, அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னாள் எம்.பி. சத்தியபாமா, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள், கோபி, அந்தியூர் பகுதி நிர்வாகிகள், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் செங்கோட்டையன் இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக செங்கோட்டையன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Sengkottaian ,Kobe ,Erode ,Cenkottayan ,Sengkottayan ,Atamug ,Panirselvam ,D. ,V. ,Dinakaran ,Edappadi Palanisami ,Chengottaian ,Adamugawa ,
× RELATED அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்;...