பெங்களூரு: ரிஷப் பண்ட் தலைமையிலான இந்தியா ஏ, மார்கஸ் அக்கர்மேன் தலைமையிலான தென் ஆப்ரிக்கா ஏ அணிகள் இடையிலான, அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டி, பெங்களூருவில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா அணி அபாரமாக ஆடி 309 ரன்கள் குவித்தது. பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணியில் ஆயுஷ் மாத்ரே (65 ரன்), ஆயுஷ் படோனி (38 ரன்), சாய் சுதர்சன் (32 ரன்) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
அதனால், இந்தியா 234 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின் 75 ரன் முன்னிலையுடன் தென் ஆப்ரிக்கா 2ம் இன்னிங்சை துவக்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 12 ஓவரில் தென் ஆப்ரிக்கா ஏ விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்திருந்தது. ஜோர்டான் ஹெர்மான் 12, லெஸேகோ செனோக்வனே 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். தென் ஆப்ரிக்கா 105 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று 3ம் நாளில், அந்த அணி 2ம் இன்னிங்சை தொடர்கிறது.
