×

கோபால்பட்டி அருகே சாலை தடுப்புச் சுவரில் அரசு பஸ் மோதி விபத்து: கண்டக்டர் உள்பட 5 பேர் காயம்

 

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே அதிகாலையில் அரசுப் பேருந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கண்டக்டர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 25 பயணிகளுடன் அரசு பேருந்து காரைக்குடிக்கு புறப்பட்டது. இதில் 25 பயணிகள் இருந்தனர். பேருந்தை தேவகோட்டையை சேர்ந்த கேசவன் என்பவர் ஓட்டிச் சென்றார். கோபால்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது.

இதில் கண்டக்டர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சாணார்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தால் அதிகாலையில் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags : Gopalpatti ,Karaikudi ,Dindigul ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...