×

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஹமாஸ் அமைப்பினர்: காஸா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் உத்தரவு

இஸ்ரேல்: காஸா மீது உடனடியாக ராணுவத் தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாசுக்ம் இடையே இரண்டு ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் எகிப்தில் உள்ள ஷர்ம் எல் ஷேக்கில் அதிபர் டிரம்ப் பங்கேற்ற மாநாட்டின் போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

ஹமாஸ் ஒப்படைத்த ஒரு பணய கைதியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அந்த பணயக் கைதியின் பெயர் தல் ஹைமி(42). கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி காசா எல்லையில் இருந்த தல் ஹைமியை சுட்டு கொன்ற பின்னர் அவரது உடலை ஹமாஸ் படையினர் காசாவுக்கு கொண்டு சென்றனர். ஹமாஸ் இதுவரை 13 பேரின் உடல்களை ஒப்படைத்துள்ளது. அவர்களின் பிடியில் இன்னும் 15 உடல்கள் இருக்கின்றன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இஸ்ரேல் ராணுவத்தின் மீது ஹமாஸ் படையினர் துப்பாக்கிசூடு நடத்திய தில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் பதிலுக்கு இஸ்ரேல் தாக்கியதில் 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 80 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனனர். இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு தரப்பினரும் மோதி வரும் நிலையில்,

அமெரிக்காவின் மத்தியஸ்துதுடன் செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு தெளிவாக மீறி உள்ளதாக பிரதமர் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பனைய கைதிகளின் எஞ்சிய உடல் பாகங்களை ஹமாஸ் ஒப்படைப்பது தொடர்பான சிக்கலில் இந்த உத்தரவுக்கு நேரடி காரணமாக கூறப்படுகிறது. நெதன்யாகுவின் உத்தரவை அடுத்து காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

 

Tags : Hamas ,Gaza ,Israel ,Middle East ,Netanyahu ,Egypt ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள்...