- Duweiler
- நத்தம்
- கிருஷ்ணன்
- நத்தம் கோவில்பட்டி
- சேவை செய்யப்பட்ட பிரிவு
- மதுரை தேசிய நெடுஞ்சாலை
- மதுரை
- ஜயகிர்ணன்
நத்தம், அக். 29: நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (80). இவர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேர்வீடு பிரிவு அருகேயுள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது மதுரையை நோக்கி ஜெயக்கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
