×

விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா எனும் ஏஐ மூலம் இயங்கும் தகவல் களஞ்சியத்தை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்!!

வாஷிங்டன்: விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா (GROKIPEDIA) எனும் ஏஐ மூலம் இயங்கும் தகவல் களஞ்சியத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.ஆன்லைன் உலகின் தகவல் களஞ்சியமான விக்கிபீடியா கடந்த 2001ல் தொடங்கப்பட்டது. இதனை விக்கிபீடியா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த தளத்தில் 6.5 கோடிக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், விக்கிபீடியா தளத்தில் உள்ள கட்டுரைகள் பக்கசார்பாக இருப்பதாகவும், அரை உண்மைகள் கொண்டவையாக இருப்பதாகவும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

இந்நிலையில் விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா எனும் புதிய தகவல் களஞ்சியத்தை அறிமுகம் செய்வதாக மஸ்க் 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த குரோக்பீடியா எக்ஸ் ஏஐ எனும் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் மூலம் இயக்கப்படும். விக்கிபீடியாவில் வரும் தகவல்களை எக்ஸ் ஏஐ ஆய்வு செய்து அதில் உள்ள தவறுகள், பாதி உண்மைகளை திருத்தி அவற்றை சரி செய்யும். இதன் மூலம் பல உண்மைத் தகவல்களை மக்கள் அறிய முடியும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் குரோக்பீடியா என்ற தளத்தை எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த குரோக்பீடியாவை பயன்படுத்துவதற்கு எளிதாகவும் சிரமம் எதுவும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, இது அனைவருக்கும் இலவசமானது என்றும் தற்போது நிறுவப்பட்டுள்ள 0.1 பதிப்பைவிட, 1.0 பதிப்பு 10 மடங்கு சிறப்பானதாக இருக்கும் என்றும் எலான் தெரிவித்துள்ளார். இருப்பினும், தற்போதைய 0.1 பதிப்பு, விக்கிபீடியாவைவிட மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Elon Musk ,Crocpedia ,Wikipedia ,WASHINGTON ,ELAN MUSK ,GROKIPEDIA ,Wikipedia Foundation ,
× RELATED அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்;...