×

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ‘மோன்தா’ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ‘மோன்தா’ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. மசூலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 190 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே இன்றிரவு தீவிரப் புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Storm 'Monta ,Bengals ,Meteorological Survey Centre ,Delhi ,Bengal Sea ,Masulipatnam ,Monta Storm ,Kalingapatnam, Andhra ,
× RELATED பழைய அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை...