×

வாக்காளர் பட்டியல் திருத்தம்: நயினார் நாகேந்திரன் விளக்கம்

 

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் துவங்கி காங்கிரஸ் ஆட்சியில் மொத்தம் 10 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடந்தது. இப்படி ஆண்டாண்டு காலமாக நடக்கும் தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையை ஏதோ புதிய முறை போல காட்சிப்படுத்த முயற்சிப்பது ஏன்?.

மேலும், திருத்தப் பணியில் ஈடுபடப்போகும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முதல் மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் வரை அனைவரும் தமிழக அரசின் கீழ் பணியாற்றுவோர் தான். தமிழகத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிகமாகியிருக்கும் வேளையில், அவர்கள் வாக்காளராக உருமாறுவதை தடுக்கத் தான் இந்த வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறதே தவிர தமிழக வாக்காளரை நீக்குவதற்கு அல்ல. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கையில் எடுத்து திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nainar Nagendran ,Chennai ,Tamil Nadu ,BJP ,Jawaharlal Nehru ,Congress ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...