×

அசாமில் பலதார மணத்திற்கு 7 ஆண்டு சிறை

கவுஹாத்தி: கவுஹாத்தியில் நடந்த விழா ஒன்றில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, \”ஒருவர் தனது மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யலாமல் வேறோரு பெண்ணை மணந்தால், அவரது மதத்தை பொருட்படுத்தாமல் அவருக்கு 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்படும். இதற்கான மசோதா குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நவம்பர் 25ம் தேதி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.எந்த விலை கொடுத்தும் பெண்களின் கண்ணியத்தை காப்போம். குற்றம்சாட்டப்பட்டவர் தனது மதம் அதனைஅனுமதிக்கிறது என்று கூறலாம் ஆனால் பாஜ அரசு ஒருபோதும் பலதார மணத்தை அனுமதிக்காது\\” என்றார்.

Tags : Assam ,Guwahati ,Chief Minister ,Himanta Biswa Sarma ,
× RELATED பழைய அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை...