×

மதுரையிலிருந்து துபாய்க்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கம்!

 

சென்னை: மதுரையில் இருந்து துபாய்க்கு இன்று 173 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக துபாய் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 173 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், விமானத்தில் ஏற்பட்ட எந்திரக் கோளாறை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : Madurai ,Dubai ,Chennai ,Madura ,Chennai Airport ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...