வாஷிங்டன்: தென்அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதையடுத்து வெனிசுலா அருகே உள்ள சர்வதேச கடல்பகுதியில் போதைப்பொருள்களை கடத்தும் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதன்ஒரு பகுதியாக நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ்சில் உள்ள டையெஸ் விமானப்படை தளத்தில் இருந்து 2 பி-1 லான்சர் குண்டு வீச்சு விமானங்கள் கரிபீயன் கடல்பகுதி வழியாக வெனிசுலா கடல்பகுதி வரை பறந்து சென்று போதை பொருள் கடத்திய படகு மீது குண்டுகள் வீசின. இதில் 6 பேர் பலியானார்கள். இதேபோன்று கடந்த வாரம் பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ஸ் குண்டு வீச்சு விமானங்கள் வெனிசுலா கடல்பகுதி வரை பறந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
