ஒட்டாவா: பன்முக கலாசாரத்தை கொண்டாடும் விதமாக கனடாவில் 2025ம் ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு தபால்தலை வௌியிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் கனடா அரசு கடந்த 2017ம் ஆண்டு முதல் சிறப்பு தபால்தலையை வௌியிட்டு வருகிறது. அதன்படி தற்போது 8வது ஆண்டாக 2025ம் ஆண்டு தீபாவளிக்கான சிறப்பு தபால்தலையை கனடா போஸ்ட் வௌியிட்டுள்ளது. இதில் ரங்கோலி கோலமும், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தீபாவளி என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து கனடா போஸ்ட் அண்மையில் வௌியிட்ட செய்திக்குறிப்பில், “கனடா நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் விதமாக, கனடாவிலும், உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பிற சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையான தீபாவளியை குறிக்கும் சிறப்பு தபால்தலையை வௌியிடுவதில் பெருமை அடைகிறோம் ” என தெரிவித்துள்ளது.
