×

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.92,320க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டிஉள்ளது. இந்நிலையில், சில தினங்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 22), ஆபரண தங்கம் கிராம் 11,540 ரூபாய்க்கும், சவரன் 92,320 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 175 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (அக் 23), தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000க்கு விற்பனை செய்யப்பட்டது.சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.40 குறைந்து கிராமுக்கு ரூ.11,500க்கு விற்கப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.174க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (அக் 24), சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.11,540க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.171க்கும், ஒருகிலோ ரூ.1,71,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.720 உயர்ந்து சவரன் ரூ.99,680க்கு விற்பனை!