×

ஆலவயலில் இன்டர்லாக் சாலை அமைக்கும் பணி தீவிரம்

கூடலூர் அக் 24: கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலவயல் பகுதியில் பேரூராட்சி சார்பில் இன்டர்லாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பேரூராட்சியின் 15வது வார்டு ஆலவயல் பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ள முதல் மற்றும் இரண்டாவது தெரு சாலைகள் பேரூராட்சியின் சிறப்பு நிதி 2025-26ன் கீழ் 240 மீட்டர் தூரத்திற்கு புதிய இன்டெர்லாக் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பம் முதல் மண் சாலையாக காணப்பட்ட இந்த சாலைகளை தரம் உயர்த்தி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, தற்போது இன்டர்லாக் சாலைகள் அமைக்கப்படுகிறது என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags : Interlock ,Alavayal ,Gudalur ,Thevarcholai ,
× RELATED ஊட்டியில் பனிக்கால கவியரங்கம்