×

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி!!

சென்னை: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக உணவு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.186.94 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Chennai Corporation ,Chennai ,Chennai… ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து