- ஜாக்டோ ஜியோ
- கூடலூர்
- கூடலூர் தாலுகா
- ஜாக்டோ ஜியோ கூடலூர்
- சிவபெருமாள்
- ஜாக்டோ ஜியோ சங்கம்
- சலீம்
- சுப்ரமணியம்
- விஷ்ணுதாஸ்
- ஜெயகாந்தன்…
கூடலூர், அக்.18: ஜாக்டோ ஜியோ கூடலூர் வட்ட கிளை சார்பில் கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவபெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் சலீம்,சுப்பிரமணியம், விஷ்ணுதாஸ், ஜெயகாந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மதியழகன் வரவேற்றார். முருகேசன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். செந்தில்குமார் கண்டன உரையாற்றினார். 2021ம் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை, முதுகலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், மெஆர்பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் ஊர் புற நூலகர் ஆகியோருக்கு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். தொடக்க கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். படித்த இளைஞர்களுக்கு முறையான நியமனத்தில் வேலைவாய்ப்பை வழங்குதல் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
