×

பல்லடம் வ.உ.சி.நகரில் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

 

பல்லடம், அக். 11: பல்லடம் கரைப்புதூர் ஊராட்சி வ.உ.சி. நகரில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மதிமுக மாவட்ட பொருளாளர் ஆர்.ஆர்.ரவி, பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், பணியாளர்களை குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்பி குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து ஓராண்டாக பயன்பாடு இல்லாமல் இருந்த புதிய குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு சில மணி நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக அதிகாரிகளுக்கு, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Palladam VOC ,Nagar ,Palladam ,MDMK District ,Treasurer ,R.R. Ravi ,Block Development ,Officer ,Kanagaraj ,Palladam Karaippudur Panchayat VOC Nagar ,
× RELATED பெயிண்டரிடம் செல்போன் பறித்தவருக்கு 2 ஆண்டு சிறை