×

பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா

காவேரிப்பட்டணம், அக்.10: காவேரிப்பட்டணம் அருகே பையூர் ஊராட்சி கந்தலம்பட்டி, ஊத்துபள்ளம் பொதுமக்கள் நீண்ட நாட்களாக புதிய ரேஷன் கடை வேண்டி கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், கந்தலம்பட்டி கிராமத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை, கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் பையூர் ரவி வரவேற்று பேசினார். நகர செயலாளர் விமல், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன், மோகன், விக்ரம்குமார், கணேசன் முன்னிலை வகித்தனர். இதில் கோவிந்தசாமி, அன்பு, சேட்டு, ஜெயபிரகாஷ் மற்றும் விற்பனையாளர் பரிதா, காளியப்பன், மணியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : time ,Kaveripatnam ,Kandalampatti ,Uthupallam ,Payyur panchayat ,Krishnagiri ,MLA ,Ashok Kumar ,
× RELATED சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்