×

முருங்கைக்கீரை சாதப் பொடி

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை – ஒரு கட்டு

தனியா – 4 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 10

பொட்டுக்கடலை – 4 டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

கறுப்பு உளுந்தம்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்

பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 10 பல் (தோலுடன்)

பெருங்காயம் – ஒரு டீ ஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

உப்பு – 2 டீஸ்பூன்.

செய்முறை

முருங்கைக் கீரையை ஆய்ந்து சூரிய ஒளி படாமல் நிழலில் காய வைக்கவும். நான்கு நாட்கள் நன்றாக காய்ந்ததும் வாணலியில் எண்ணெய் இல்லாமல் லேசாக சூடு சூடாக்கி இறக்கவும். அதன்பின் தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கறுப்பு உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு, பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வாணலியில் வறுக்கவும். ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் போட்டு பொட்டுக்கடலை, பெருங்காயம் போட்டு நைசாக அரைக்கவும். முருங்கைக்கீரை சாதம் பொடி தயார்.

Tags :
× RELATED தேங்காய்ப்பால் பணியாரம்