×

சில்லிபாயிண்ட்…

* ஆஸி-இலங்கை போட்டி ரத்து
கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை 5வது ஒரு நாள் போட்டி, இலங்கையின் கொழும்பு நகரில் இலங்கை, ஆஸி அணிகள் இடையே நேற்று நடக்க இருந்தது. தொடர் மழை காரணமாக இப்போட்டி கடைசியில் ரத்து செய்யப்பட்டது.

* சீனா ஓபன் பைனலில் அமண்டா
பெய்ஜிங்: சீனா ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் அரை இறுதியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா, சக அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்பை 6-1, 5-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.

* பிரக்ஞானந்தாவுக்கு ரூ.35 லட்சம் பரிசு
சா பாலோ: கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ் செஸ் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 4ம் இடம் பிடித்து ரூ.35 லட்சம் பரிசு பெற்றார். இந்த போட்டியில் அமெரிக்காவின் ஃபேபியானோ கரவுனா முதலிடம் பிடித்தார். பிரான்ஸ் வீரர் வஷியர் லாக்ரே 2, மற்றொரு அமெரிக்க வீரர் லெவோன் ஆரோனியன் 3வது இடங்களை பிடித்தனர்.

* முசெட்டி 3ம் சுற்றுக்கு தகுதி
ஷாங்காய்: ஷாங்காய் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டிகளில் நேற்று, இத்தாலி வீரர் லொரென்ஸோ முசெட்டி, கனடா வீரர் டெனிஸ் ஷபலோவ், ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ், ஸ்பெயின் வீரர் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் வெற்றி பெற்று 3ம் சுற்றுக்கு முன்னேறினர்.

Tags : Chillipoint ,AUSSI-SRI LANKA ,COLOMBO ,'S WORLD CUP ,SRI LANKA ,AUSSIE ,COLOMBO, SRI LANKA ,
× RELATED இந்திய கிரிக்கெட் வீராங்கனை சுவாரஸ்ய...