×

சுகுணா புட்ஸ் நிறுவனங்களில் 2வது நாளாக ஐடி சோதனை

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு சுகுணா புட்ஸ் நிறுவனம், முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகாரின்பேரில், கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகுணா குரூப் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று 2வது நாளாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே போல உடுமலைப்பேட்டையில் உள்ள சுகுணா புட்ஸ் அலுவலகம், கணபதிபாளையம் மற்றும் வரதராஜபுரத்தில் உள்ள கோழி தீவன உற்பத்தி தொழிற்சாலை ஆகிய இடங்களிலும் நேற்று 2வது நாளாக ரெய்டு நடைபெற்றது. இதேபோல், நாமக்கல் மோகனூர் ரோட்டில் வசித்து வரும் கோழி பண்ணை அதிபர் வாங்கிலி சுப்பிரமணியமுக்கு சொந்தமான திருச்சி ரோட்டில் உள்ள அலுவலகம், மோகனூர் ரோட்டில் உள்ள வீடு மற்றும் அருகில் உள்ள நிதி நிறுவனம் ஆகிய இடங்களில் 2ம் நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது.

Tags : Suguna Foods ,Coimbatore ,Udumalaipettai, Tiruppur district ,Anna Statue, Avinashi Road, Coimbatore ,
× RELATED இருதய இடையீட்டு...