- கனேடிய அரசாங்கம்
- ஒட்டாவா
- எங்களுக்கு
- நீதிக்கான சீக்கியர்கள்
- எஸ்எஃப்ஜே
- இந்திரஜித் சிங் கோசல்
- குர்பத்வந்த் சிங் பன்னுன்
ஒட்டாவா: காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் அமெரிக்காவில் ‘சீக்கியர்களுக்கான நீதி’ (எஸ்எப்ஜே) என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். இதன் கனடா நிர்வாகியாக இந்திரஜித் சிங் கோசல் (36) செயல்பட்டு வந்தார். குர்பத்வந்த் சிங் பன்னுனின் வலதுகரமாக கருதப்படும் அவரை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர். கனடாவில் இந்து அமைப்புகளை, நிர்வாகிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பல்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஓஷாவாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
