×

நாய் குறுக்கே வந்ததால் சோகம் சாலை தடுப்பில் கார் மோதி 3 பேர் பலி

*இருவர் காயம்

திருமலை : திருப்பதியை சேர்ந்தவர் லட்சுமணன்(70). இவர் தனது முன்னோர்களுக்கு மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க காரில் தனது மனைவி, பேரன் என 5 பேருடன் பித்தாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பாபட்லா மாவட்டம், மார்தூர் மண்டலத்தில் உள்ள கோலாலபுடி அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது நாய் குறுக்கே வந்துள்ளது. நாயை மீது ஏற்றால் இருக்க காரை திருப்பிய போது, கட்டுபாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் லட்சுமணன், அவரது மனைவி சுப்பையம்மா(65), பேரன் ஹேமந்த்(25) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகறிது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Tirumala ,Lakshmanan ,Tirupati ,Pithapuram ,Mahalaya Amavasya ,Marthur mandal ,Babatla district… ,
× RELATED ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச்...