×

மளிகை கடையின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது

திருப்பூர்,செப்.19: திருப்பூர், வீரபாண்டி அடுத்த வள்ளலார் நகரில் கடந்த 16ம் தேதி பாலமுருகன் (47). என்பவர் நடத்தி வரும் மளிகை கடை கதவின் பூட்டை உடைத்து ரூ.7,200 பணம் மற்றும் தராசை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன்அடிப்படையில் கே.செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (20) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர் மளிகை கடையில் பூட்டை உடைத்து பணம், தராசு திருடியது தெரியவந்தது. தொடர்ந்து நந்தகுமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

 

Tags : Tiruppur ,Balamurugan ,Vallalar Nagar, Veerapandi, Tiruppur ,Balamurugan… ,
× RELATED வரி செலுத்தாத 11 கடைகளுக்கு ‘சீல்’ உடுமலை நகராட்சி ஆணையர் அதிரடி