×

வருடாபிஷேக விழா

மானாமதுரை, செப். 13: மானாமதுரை கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சிவகங்கை பைபாஸ் ரோட்டில் உள்ள எஸ்எஸ்கே நகரில் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வருடாபிஷேக விழா நடந்தது. அதிகாலையில் விநாயகருக்கு சந்தனம் பன்னீர் பால் இளநீர் உள்ளிட்ட 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் வஸ்திரங்கள் மலர்மாலைகள் வெள்ளிக்கவசம் உள்ளிட்டவகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கணபதி ஹோமத்திற்குப் பின் மகா தீபராதனை நடந்தது.

Tags : Manamadurai ,Selvavinayagar ,Temple ,Kumbapishekam ,Ssk City ,Shivaganga Bypass Road ,Kalkurichi Uratchi ,Vinayakar ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...